நீதிமன்ற வளாகங்களில் சுதந்திர தின நிகழ்வுகளை வந்தே மாதர தேசிய பாடலை பாடப்பட வேண்டும்.
80 ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி ,சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு, மதுரை கிளை, தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிழமை நீதிமன்றங்கள், புதுச்சேரி நீதிமன்ற வளாகங்களில் சுதந்திர தின நிகழ்வுகளை வந்தே மாதர தேசிய பாடலை பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும் என்றும் வந்தே மாதரம் பாடல் முடிவடைந்த உடன் தேசிய கொடி ஏற்றி வைக்க வேண்டும் என்றும் கொடி ஏற்றத்தை தொடர்ந்து இறுதியாக தேசிய கீதம் ஜன கன மன இசைக்கப்பட்டு விழா நிறைவடைய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வந்தே மாதரம் 150 ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 9 முதல் 17 வரை ஹர்ஹர் திறங்கா என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு நாடு முழுவதும் முன்னெடுத்துள்ளது. இந்தச் சுற்றறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை என்பது பல்வேறு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது .
Tags :


















