தமிழகத்தின் முக்கிய நீர் நிலைகளின் நிலவரம்.

by Staff / 10-10-2025 09:21:35am
தமிழகத்தின் முக்கிய நீர் நிலைகளின் நிலவரம்.

புழல் ஏரியின் 21.20 அடி உயரத்தில் தற்போது 20.11 அடி உயரம் உள்ளது 3300 மில்லியன் கன அடியில் தற்போது 3034 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று 310 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 420 கனஅடியாக அதிகரித்துள்ளது சென்னை குடிநீருக்காக 209 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரியின் 18.86 அடி உயரத்தில் தற்போது 4.58 அடி உயரம் உள்ளது இந்த ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனடியில் தற்போது 181 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு  20 கனஅடியாக வந்துகொண்டிருக்கிறது.

பூண்டி ஏரியின் 35 அடி உயரத்தில் 32.95 அடி உயரம் உள்ளது மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனடியில் தற்போது 2507 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று 730 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 790 கனஅடியாக அதிகரித்துள்ளது இந்த ஏரியிலிருந்து 787 கன அடிநீர்  புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

 கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி உயரத்தில் தற்போது 34.44 அடி உயரம் உள்ளது முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது 429 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 111.48 அடியாககுறைந்தது . அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 6523 கன அடியிலிருந்து 6033 கன அடியாக சற்று குறைத்துள்ளது.  அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000கன அடி வீதம் நீர் மின் நிலையங்கள் வழியாகவும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 80.53 டிஎம்சி.

தேனி மாவட்டம் போடி அதன் சுற்று பகுதிகளான குரங்கணி கொட்டகுடி உள்ளிட்ட பகுதிகளில் மாலை 4 மணி முதல்விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறதுமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி என்பதாலும் தொடர்ந்து கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாலும் கொட்டக் குடி ஆறு உள்ளிட்ட நீர்வரத்து பாதைகளை யாரும் கடக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Tags : தமிழகத்தின் முக்கிய நீர் நிலைகளின் நிலவரம்.

Share via