தூத்துக்குடி காவல்நிலையம் முன்பு தீக்குளித்த நபர் பலி.

தூத்துக்குடி முல்லைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுவிசேஷராஜ் இவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நேற்று இரவு முத்தையாபுரம் காவல் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
Tags : தூத்துக்குடி காவல்நிலையம் முன்பு தீக்குளித்த நபர் பலி.