உலக கிட்னி தினம்: மெரினாவில் விழிப்புணர்வு பேரணி

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகை ரேவதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சமூக வலைதளங்களை பார்த்து சுயமருத்துவம் செய்யக் கூடாது. தாங்களாகவே மருந்துகளை வாங்கி பயன்படுத்துதல் கூடாது. தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் நலனை பார்த்துக் கொள்ளாவிட்டால் சம்பாத்திக்கும் பணத்தை மருத்துவத்திற்கே செலவிட நேரிடும்” எனக் கூறினார்.
Tags :