திருச்செந்தூர் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

by Staff / 29-03-2024 11:44:20am
திருச்செந்தூர் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நேற்று அவர் வருகை தந்தார். பின்னர் அவர் சூரசம்ஹார மூர்த்தி, மூலவரான முருகன், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் வழிபாடு செய்தார். மக்களவை தேர்தலையொட்டி திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி இந்த முறையும் போட்டியிடுகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo