குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களை குறி வைத்து விற்கப்படும் ரசாயன ஆயில் கலந்த பேரிச்சம்பழம் ஒரு டன் பிடிபட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் அந்த காலகட்டங்களில் சீசன் காலமாகும் அப்பொழுது சுமார் 80 லட்சம் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவியில் நீராடுவதற்கு நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து திரண்டு வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளிடம் ஏராளமான சிப்ஸ் பேரிச்சம்பழம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த காலகட்டங்களில் குற்றாலத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராகசுப்பிரமணி அதிரடி சோதனை மேல் கொண்டு பல்வேறு கடைகளில் உணவு பொருட்கள் இறைச்சிப் பொருட்கள் உள்ளிட்டவைகளை கண்டறிந்து அழித்தார் மேலும் கடைகள் மீது வழக்கு பதிவு செய்தார் இதன் தொடர்ச்சியாக தற்பொழுது இதே போன்று தற்பொழுது சபரிமலை சீசன் காலம் என்பதால் சபரிமலைக்கு தினமும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் வந்து குளித்துவிட்டு சபரிமலை சென்று திரும்பி வண்ணம் உள்ளனர் சபரிமலைக்கு சென்று விட்டு குற்றாலம் வரும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் வந்து பிரசாதம் வழங்குவதற்காக சிப்ஸ் பேரீச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது இந்த நிலையில் குற்றாலத்தில் விற்பனை செய்யப்படும் பேரிச்சம்பழம் அனைத்தும் தரம் குறைந்த மினரல் ஆயில் என்கின்ற ரசாயன கலவை கலந்து விற்பனை செய்யப்படுவதாக வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைக்கவே அவர் இன்று குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டார் இதன் தொடர்ச்சியாக மூன்று கடைகளில் நடைபெற்ற சோதனையில் சுமார் ஒரு டன் பேரிச்சம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் அனைத்து பேரிச்சம்பழமும் தரம் குறைவாக மினரல் ஆயில் கலவை செய்யப்பட்டு விற்பனை செய்வது கண்டறியப்பட்டு அனைத்தும் பறிமுதல் செய்தார் மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பேரிச்சம்பழமும் குற்றாலம் பழைய குற்றாலம் சாலையில் உள்ள குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் பினாயில் ஊற்றி அளிக்கும் பணி நடைபெற்றது குற்றாலத்தில் விற்பனை செய்யப்படும் பேரிச்சம்பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மக்களின் உயிரோடு விளையாடும் பொருட்டாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் குற்றாலம் பகுதியில் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குழுவாக வந்து சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற கோரிக்கையும் எழுந்து வருது குற்றாலம் வரும் ஐயப்ப பக்தர்கள் தரமான பேரிச்சம் பழங்களை வாங்கி செல்ல வேண்டும் என்றும் உணவுப் பொருளான பேரிச்சம் பழத்தை குறைந்த விலைக்கு விற்பனையாவதை வாங்கி செல்வது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தெரிவித்தார்.
Tags : குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களை குறி வைத்து விற்கப்படும் ரசாயன ஆயில் கலந்த பேரிச்சம்பழம் ஒரு டன் பிடிபட்டது.