கூட்டணி விவகாரம்: அதிமுகவை அட்டாக் செய்த டிடிவி தினகரன்

அதிமுக கூட்டணியில் ஒருபோதும் ஓபிஎஸ், டிடிவிக்கு இடமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், "கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதை பாஜகதான் சொல்ல வேண்டும், அதிமுக அல்ல" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை பாஜகதான், அதிமுக அல்ல. நாங்கள் பிரதமர் மோடிக்காக கூட்டணியில் இணைந்தவர்கள்” என்றார்.
Tags :