பனிமூட்டம் அதிர்ஷ்டாவசமாக உயிர்தப்பிய வாகன ஒட்டி

by Editor / 06-12-2022 09:27:52am
பனிமூட்டம் அதிர்ஷ்டாவசமாக உயிர்தப்பிய வாகன ஒட்டி

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அருகே உள்ள ஊர்குடி என்கிற இடத்தில் காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றி அரியலூர் சென்ற லாரியின் பக்கவாட்டில் கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த டாட்டா ஏஸ் வாகனம் மோதி முகப்பு பகுதி முழுவதும் சேதம் அடைந்தது.டிரைவர் மற்றும் கிளீனர் படுகாயம் அடைந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பனி மூட்டத்தின் காரணமாக எதிரே வந்த வாகனம் சரிவர தெரியாமல் லாரியின் பக்கவாட்டில் டாட்டா எஸ் வாகனம் மோதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.மேலும் லாரியின் பக்கவாட்டில் மோதியய டாட்டா ஏஸ் வாகனம் இழுத்துச் செல்லப்பட்டு சாலை ஓரத்தில் உள்ள இரும்பு வேலியில் மோதி நின்றதால்  உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.அருகிலுள்ள வெட்டாற்றில் நீர் கரைபுரண்டு ஓடுவதால் வாகனம் ஆற்றில் விழுந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via

More stories