இரண்டாம் நாள் ஆட்டம்இன்று
இந்திய அணி-, தென்ஆப்பிரிக்காவில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடந்த முதலாவது தொடரில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்திலும், ஜோகன்னஸ்பர்க்கில் 2ஆவது தொடரில் தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி. இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 3ஆவது - கடைசி டெஸ்ட் போட்டி, கேப்டவுனில் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணிகேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார் முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி, 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் கோலி 79 ரன், புஜாரா 43 ரன்சேர்த்தனர்.: தென்னாப்பிரிக்கா ரபாடா 4 விக்கெட்டு, யான்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் களமிறங்கி கேப்டன் எல்கர், 3 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டம் முடிவு.. தென்னாப்பிரிக்க அணி 8 ஒவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியை விட 206 ரன்கள் பின்தங்கியநிலையில், இரண்டாம் நாள் ஆட்டம்இன்று நடைபெற உள்ளது.
Tags :