பரோட்டா சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி...கடைக்கு சீல் அதிகாரிகள்

by Staff / 04-07-2023 03:10:48pm
பரோட்டா சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி...கடைக்கு சீல் அதிகாரிகள் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கடைவீதியில் ஒரு ஹோட்டலில் கடந்த 30ஆம் தேதியன்று இரவு பாரோட்டா சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் உமா சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக கூறி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.
 

Tags :

Share via