இன்று இங்கிலாந்து மூன்றாவது மன்னராக சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெறுகிறது

by Admin / 06-05-2023 02:40:10pm
இன்று இங்கிலாந்து மூன்றாவது மன்னராக சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெறுகிறது

இன்று இங்கிலாந்து மூன்றாவது மன்னராக சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெறுகிறது .அரண்மனையில் இருந்து சார்லஸ் அவர் மனைவி காமிலா குதிரை பூட்டிய தங்கரதத்தில் வேஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்திற்கு செல்வார்கள். இங்கிலாந்து அரச குடும்ப பாரம்பரிய முறைப்படி செங்கோல் ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னராக அரியணையில் அமர்வார். .அவருக்கு கிறித்துவ முறைப்படி குருமார்கள் புனித நீர் தெளித்து ஆசீர்வதித்து மன்னராக கிரீடத்தை சூட்டுவார்கள் ..மன்னர் முடி சூட்டு விழாவை தொடர்ந்து பிரிட்டன் ராணியாக அவரது மனைவி காமிலா பாரம்பரிய சடங்குகளின் அடிப்படையில் அவருக்கு கிரீடம் சூட்டப்படும்.. இந்த நிகழ்வுக்கு பின் அவர்கள் அரசர்களாகவும் அரசியாகவும் மதிக்கப்படுவார்கள்;. கௌரவப்படுத்தப்படுவார்கள். இந்நிகழ்வை காண்பதற்காக உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வருவதனால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இன்று இங்கிலாந்து மூன்றாவது மன்னராக சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெறுகிறது
 

Tags :

Share via

More stories