தமிழ்நாட்டில் உள்ள 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் .

by Admin / 06-05-2023 02:52:12pm
தமிழ்நாட்டில் உள்ள 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் .

 வடக்கு தமிழக கடலூரப் பகுதிகளில்  வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் இந்தியா வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் .வேலூர் ,திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தேனி ,கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது .நேற்றிலிருந்து ,சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், இன்றும் அதே நிலை தொடர்வதாலும் இடியோடு கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும்வானிலை மையம் அறிவித்துள்ளது..

 

Tags :

Share via

More stories