10, 11-ம் வகுப்புத் துணைத் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் ஆல் பாஸ்: முதல்வர்

by Editor / 12-09-2021 12:01:31pm
10, 11-ம் வகுப்புத் துணைத் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் ஆல் பாஸ்: முதல்வர்

10-ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 16 முதல் 28-ம் தேதிவரையும், 11-ம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 15 முதல் 30-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இத்தேர்வை மாற்றுத்திறனாளி மாணவர்களும் எழுதுவதாக இருந்த நிலையில், அவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''செப்டம்பர் 2021-ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11-ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளை, தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவி வரும் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via