மடி ஏந்தி வாக்கு கேட்ட ராதிகா சரத்குமார்.

by Editor / 03-04-2024 09:28:47am
 மடி ஏந்தி வாக்கு கேட்ட ராதிகா சரத்குமார்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ராதிகா சரத்குமார் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கப்பலூரில் பெருந்திரளாக கூடியிருந்த மக்கள் முன்னிலையில் கணவர் சரத்குமாருடன் கூட்டணி கட்சியை சேர்ந்த அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பிரச்சார வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு கப்பலூர் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சார்பில் பூரண கும்பமரியாதை கொடுத்து வரவேற்றனர்.

பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வந்த பிரச்சார வாகனத்தில் நாட்டாமை பாடல் ஒலித்தபடி கணவருடன் வந்த வேட்பாளர் ராதிகா சரத்குமார். தொடர்ந்து., அங்கிருந்து தேவர் சிலைக்கு சரத்குமாருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேசுகையில் :நீங்கள் காட்டும் அன்பும் ஆதரவும் எனக்கு வாக்களித்து வெற்றி வாங்கி தரணும். பசும்பொன் எப்போது சொல்வார்., தேசியம் தெய்விகம் இரு கண்கள் மாதிரி.! அதே போல் தான் பாஜக கட்சியின் கொள்கை. உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக பாராளுமன்றத்தில் போராடுவேன். இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி., ஆனால் எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்.? உங்களுக்கு மாநிலத்திலும் யாரும் இல்லை மத்தியிலும் யாரும் இல்லை.? எனவே எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என பிரச்சாரத்தை நிறைவு செய்த ராதிகாவிடம் கூடி இருந்த மக்கள் கிழக்குச் சீமையிலே படத்தில் விருமாயி கதாபாத்திரத்தில் அண்ணனிடம் மடியேந்தி கணவருக்காக பிச்சை கேட்பது போல் நடித்துக் காட்டச் சொன்னவுடன் அதை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா.? பரவாயில்லையே எனக் கூறிய ராதிகா கிழக்குச் சீமையிலே படத்தில் பேசிய வசனத்தை சொல்லி சினிமாவில் வருவது போன்று மடியேந்தி பொதுமக்களிடம் வாக்கு கேட்டார்.

 

Tags :  மடி ஏந்தி வாக்கு கேட்ட ராதிகா சரத்குமார்.

Share via

More stories