கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தொற்று குறைய உதவிய மக்களுக்கு நன்றி - தமிழ்நாடு முதலமைச்சர்!

by Editor / 14-06-2021 10:06:37am
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தொற்று குறைய உதவிய மக்களுக்கு நன்றி -  தமிழ்நாடு முதலமைச்சர்!

தமிழகத்தில் நேற்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 267 பேர் உயிரிழந்த நிலையில் 25,895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பால் 1,49,927 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதனால் தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், “அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் இரண்டு வார காலத்தில் அனைத்தும் கட்டுக்குள் வந்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றியதால் குறைந்துள்ளது. அரசின் விதிகளை பின்பற்றி நடந்து கொண்ட மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி . 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்த நிலையில் 15 ஆயிரத்துக்கும் கீழ் தொற்று பதிவாகியுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை படுக்கை வசதி இல்லை போன்ற நிலைமை தற்போது இல்லை. கொரோனா கட்டளை மையத்தை தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது” என்று கூறியுள்ளார்

 

Tags :

Share via