வருமான வரி கணக்கு தாக்கல் இன்றே கடைசி நாள்

by Editor / 31-07-2022 10:55:40am
வருமான வரி கணக்கு தாக்கல் இன்றே கடைசி நாள்

வருமான வரித்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 29ம் தேதியான நேற்று முன்தினம் வரை ரூ.4.52 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.43 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். ஜூலை 31ம் தேதிக்குள் (இன்று) வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத பட்சத்தில், டிசம்பர் 31ம் தேதி வரையில் கணக்கை தாக்கல் செய்யலாம். ஆனால் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் தாமதக் கட்டணம் ரூ.5,000 ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் தாமதக் கட்டணம் ரூ.1,000 செலுத்த வேண்டும், என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் 30 தேதி நள்ளிரவு வரையிலும் ஏராளமானவர்கள் தங்களது கணக்குகளை பதிவேற்றம் செய்தனர்.இன்றும் ஏராளமானவர்கள் தங்களது கணக்குகளை தாக்கல் செய்துவருவதால் இணையத்தின் வேகம் கொஞ்சம் குறைந்தே உள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags : Today is the last day to file income tax returns

Share via