அமெரிக்க- ஈரான் பேச்சுவார்த்தை

by Admin / 11-04-2026 10:32:08am
அமெரிக்க- ஈரான் பேச்சுவார்த்தை

அமெரிக்கதுணை அதிபர் ஜே. டி . வேன்ஸ், அமெரிக்க அதிபரின் மருமகன் ஜார்ரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட் காஃப் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப்  தலைமையிலான குழுவினர் இஸ்லாமாபாத்  வந்துள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஈரான் மீது முன் எப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ஈரானின் முழு நாகரிகத்தையே அழித்து விடுவேன் என்றும் அதிபர் டொனால் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். லெபனானில், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை ஈரான் முன் வைத்துள்ளது அதே சமயம் ஹார்முஸ் நீர் சலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் கோரிக்கை ஈரானிடம் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் மேற்காசிய பகுதிகளில் போர் பதற்றம் தணிந்து இயல்பான சூழல் நிலவும்.

 

Tags :

Share via
Logo