குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம்..

by Admin / 10-08-2021 12:06:58pm
குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம்..

உதகையில் பிள்ளைகளைக் கொன்று விட்டு, பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள புதுமந்து பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு கீதா என்ற மனைவியும், ரஷிதா, விஷ்வா என்ற இரு குழந்தைகளும் இருந்தனர். இதனிடையே சந்திரன் அந்த பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றை குத்ததைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக இவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரமால் இருந்ததாக தெரிகிறது. மேலும் வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
 
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து பார்த்தபோது, கணவன், மனைவி இருவரும் தூக்கில் தொடங்கிய நிலையில் இருந்ததோடு, குழந்தைகள் இருவரும் தரையில் இறந்து கிடந்துள்ளனர்.

 இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொழிலில் நஷ்டமா அல்லது கடன் பிரச்சனை காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via