விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இப்போது இல்லை என தகவல்

by Staff / 08-05-2024 12:50:41pm
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இப்போது இல்லை என தகவல்

மக்களவை தேர்தலுடன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜுன் 1ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான 7வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து ஜுன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த நிலையில், 7வது கட்ட மக்களவை தேர்தலுடன், தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.கடைசி கட்ட மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனை அடுத்து, அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via