டெல்லியில் இன்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

by Admin / 19-07-2026 01:12:22pm
டெல்லியில் இன்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் இன்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகமாக அவையை நடத்த சபாநாயகர் மற்றும் மத்திய அரசு தரப்பில் ஒத்துழைப்பு கூறப்பட்டது. 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ள கூட்டத் தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெற உள்ளது. திமுக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஏற்கனவே நடந்து முடிந்திருந்தது. கூட்டத்தில் காவிரி நீர் விவகாரம் தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளை எழுப்ப வேண்டும் என்கிற நிலைப்பாடு எடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி கூட்டணி கூட்டத்துடரின் முதல் நாளான நாளை கோடி அரசின் மசோதாக்களை எதிர்கொள்ளும் விதம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தக் கூட்டத் துறையில் மத்திய அரசு ஏழு மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. வருமான வரி, திருத்த மசோதா 202,6 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த மசோதா, தேசிய அவமதிப்பு தடுப்பு மசோதா, எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு திருத்த மசோதா உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக திமுக பாராளுமன்ற உறுப்பினரான டி. ஆர். பாலு, திருச்சி சிவா ஆகியோர் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo