குமரியில் படகு பயண கட்டணம் சாதாரண பயணிகளுக்கான உயர்வு

கன்னியாகுமரியில் படகு பயண கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பகுதிக்குச் செல்லும் படகு பயண கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சாதாரண பயணிகளுக்கான கட்டணம் ரூ.75 லிருந்து ரூ.100 ஆகவும், மாணவர்களுக்கான சலுகை கட்டணம் ரூ.30 லிருந்து ரூ.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ரூ.300 சிறப்பு கட்டண படகில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
Tags : குமரியில் படகு பயண கட்டணம் சாதாரண பயணிகளுக்கான உயர்வு