மாமனார் எம்.எல்.ஏ - மருமகள் கவுன்சிலர்

by Editor / 13-10-2021 06:07:08pm
மாமனார் எம்.எல்.ஏ - மருமகள் கவுன்சிலர்

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வுமான தேவராஜியின் இளைய மருமகள் காயத்ரி பிரபாகரன், உள்ளாட்சித் தேர்தலில் ஆலங்காயம் ஒன்றியத்திலிருக்கும் ஏழாவது வார்டு கொத்தக்கோட்டை ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டார். எம்.எல்.ஏ-வின் மருமகள் என்பதால் மாவட்டத்திலேயே கொத்தக்கோட்டை வார்டு மட்டும் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதற்கேற்ப அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி கதிர் ஆனந்த் போன்றோரும் கொத்தக்கோட்டை வார்டில் அடிக்கடி பிரசாரம் செய்தனர்.


இந்த நிலையில், ஆலங்காயம் ஒன்றியத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, எம்.எல்.ஏ-வின் மருமகள் போட்டியிட்ட வார்டு மீதே அனைவரின் கவனமும் இருந்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருந்த அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஜெய்சங்கரை விடவும் 620 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். காயத்ரி பிரபாகரன் பெற்ற மொத்த வாக்குகள் 2,276.

 

Tags :

Share via

More stories