வண்டி நிறுத்தினால் 200 ரூபாய் டோக்கன் பட்டாகத்தியை காட்டிமிரட்டிய காமெடிரவுடி கத்தியுடன் கைது

மதுரை மாநகர் பெத்தானியாபுரம் அண்ணா வீதி பகுதியில் சுரேஷ் என்ற ஆட்டோ ஓட்டுனர் தனது ஆட்டோவை சாலையோரம் நிறுத்திவைத்தபோது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தனபாரதி (எ) பாண்டியராஜன் ஆட்டோவை நிறுத்தக்கூடாது என திட்டியதோடு தான் இந்த ஏரியா ரவுடி பல கேசுல ஜெயிலுக்கு போய்வந்தவன் இங்க யார் வணடியை நிறுத்தினாலும் எனக்கு 200 ரூபாய் மாமூல் கொடுக்கவேண்டும் என கூறி பட்டாக்கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து வெட்டி கொலை செய்துவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துவிட்டுசென்றுள்ளார்.
இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனர் அளித்த புகாரின் கீழ் கருப்புசாமி குத்தகைகாரர் பட காமெடி ஸ்டைலில் 200 ரூபாய் டோக்கன் போடனும் என கூறி பட்டாகத்தியை காட்டி மிரட்டியதாக காமெடி ரவுடியான தனபாரதி (எ) பாண்டியராஜனை கரிமேடு காவல்துறையினர் கைது செய்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர்.
Tags : வண்டி நிறுத்தினால் 200 ரூபாய் டோக்கன் பட்டாகத்தியை காட்டிமிரட்டிய காமெடிரவுடி கத்தியுடன் கைது