தேயிலை தோட்டங்களை அலங்கரிக்கும் ரெட்லீப் மலர்கள்.

ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட ரெட்லீப் என்கின்ற சிவப்பு வண்ண பூக்கள் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் பூக்கத்தொடங்கியுள்ளன.
இவ்வகை பூக்கள் இலையாக இருந்து நான்கு நிறங்களாக மாறி காண்போரை கவருகின்றன. சாலை ஓரங்களில் பூக்கள் பூத்து உள்ளதால் மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதனை ரசித்து செல்பியும் எடுத்து செல்கின்றனர்.
தூரத்திலிருந்து இருந்து பார்த்தாலும் மலர்களைப் போல காட்சியளித்தாலும் உண்மையில் இது இலைகள் தான். முதலில் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த இலைகள் நாளாக நாளாக பல வண்ணங்களில் காணபடுகின்றன. இதனை ரெட்லீப் மலர்கள் என அழைக்கின்றனர். பூக்களின் பிறப்பிடமான நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் ரெட்லீப் பூக்கள் கோத்தகிரியில் தேயிலை தோட்டங்களில் அதிகமாக நடவு செய்யப்பட்டுள்ளன.தற்பொழுது இப் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றன.
Tags : உதகை, குன்னூர் கோத்தகிரி கூடலூர், தேயிலை தோட்டங்களை அலங்கரிக்கும் ரெட்லீப் மலர்கள்....