பழனி கோயிலில் முருகனை தரிசித்த நடிகர் சூர்யா

by Editor / 05-06-2025 04:16:11pm
பழனி கோயிலில் முருகனை தரிசித்த நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 46-வது படத்தில் நடிக்க உள்ளார். இதனை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். கடந்த மாதம் 19-ம் தேதி இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிலையில், 'சூர்யா 46' படக்குழுவினர் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via