இளநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு 19 ஆம் தேதி தொடங்குகிறது.
.
இளநிலை எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார் .வரும் 19 ஆம் தேதி முதல் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார் .37 அரசு கல்லூரி இடங்களுக்கும் தனியார் கல்லூரியிலுள்ள 3050 தனியார் ஒதுக்கீட்டு இடங்களுக்கும்தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீடான 1610 இடங்களுக்கும் மொத்தமுள்ள 7,377 இடங்களில் மத்திய ஒதுக்கீடு 848ம்அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 % இடங்களான 454 எம்.பி.பி.எஸ்.பி.டி.எஸ்., 104 இடங்களுக்குமானபொதுக்கலந்தாய்வு நாளை மறு நாள் தொடங்கு கிறது.
Tags :