ஜனநாயகன் பட வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக பட த்தயாாிப்பு நிறுவனம் அறிவிப்பு

by Admin / 08-01-2026 12:55:31am
ஜனநாயகன் பட வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக பட த்தயாாிப்பு நிறுவனம் அறிவிப்பு

நடிகர் விஜய் நடித்து வெளிவர இருக்கும் ஜனநாயகன் படம் ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு முன்னதாக வெளியிட ப்பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பட வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. தணிக்கை சான்றிதழ் கோரி படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது .இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாத சூழல் உருவானதால் பல தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டை தேதி அறிவிக்காமல் தள்ளி வைத்துள்ளது. .இதன் காரணமாக தமிழ்நாடு  மற்ற மாநிலங்களிலும் முன் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு திரையரங்குகளிலும், பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதால் ,இங்கிலாந்து ,கனடா ,மலேசியா போன்ற நாடுகளிலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

படக்குழு

 

Tags :

Share via