நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகம் திரைப்படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகுமா....
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகம் திரைப்படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து தணிக்கை வாரியம் சில பரிந்துரைகளை வழங்கி உள்ளதால், சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பட குழுவினர் தணிக்கை சான்றிதழ் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தனர். தணிக்கை குழுவில் ஒரு உறுப்பினர் படத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தணிக்கை பணிகள் இன்னும் நிறைவடையாததால், திட்டமிட்டபடி ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது .நீதிமன்றம் இப்படத்தை ஜனவரி பத்தாம் தேதிக்கு தள்ளி வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியது. சான்றிதழ் இன்னும் கிடைக்காத நிலையிலும் பல திரையரங்குகளில் ஜனவரி 9ஆம் தேதிக்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகிறது.ஆனால் ,தேசிய அளவிலான மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை .
Tags :



















