தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் விழாவில் திறன் தமிழ்நாடு 2025 போட்டியில்துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை வள்ளுவர் கூட்டத்தில் நடந்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் விழாவில் திறன் தமிழ்நாடு 2025 போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 70 மாணவர்களுக்கு தலா 25,000 ரூபாய் மற்றும் 2-ம் இடம் பெற்ற 89 மாணவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் என மொத்தம் 24..40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ,சட்டமன்ற உறுப்பினர் எழிலன், சிறப்பு திட்ட செயலாக்கு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், பெருநகர சென்னை மாநகராட்சி நிலை குழு தலைவர் சிற்றரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் சிராந்திகுமார், திட்ட இயக்குனர் சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags :



















