விழாக்கோலம் பூண்டமதுரை  நான்கு கிலோ மீட்டர் தூரம் மக்கள் வெள்ளம்.

by Editor / 26-01-2025 04:47:20pm
விழாக்கோலம் பூண்டமதுரை  நான்கு கிலோ மீட்டர் தூரம் மக்கள் வெள்ளம்.

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இத்திட்டம் இரத்து செய்யப்பட காரணமாக இருந்தமைக்காக  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அரிட்டாப்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்.

அரிட்டாப்பட்டி வருகைதரும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக   மந்தை திடலில் கும்மி பாட்டு பாடி வருகின்றனர்.மதுரை மேலூர் மெயின் ரோட்டில் இருந்து அரிட்டாப்பட்டி வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் சாலையின் இருபுறமும் நின்று முதல்வருக்கு நன்றி தெரிவிக்க குவிந்து வருகின்றனர்.

 

Tags : விழாக்கோலம் பூண்டமதுரை  நான்கு கிலோ மீட்டர் தூரம் மக்கள் வெள்ளம்.

Share via