அ.தி.மு.க சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனைக் கூட்டம்

by Admin / 08-02-2024 07:48:07pm
அ.தி.மு.க சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனைக் கூட்டம்

அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனைக் கூட்டத்தில் கோவில்பட்டியில் பல்வேறு சங்கத்தினர் தங்கள் கோரிக்கை மனுவை முன்னாள் அமைச்சர்களிடம் வழங்கினர்.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக்களை அமைத்து அவர்கள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை மனுவாக பெற்று வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள தனியார் கல்லூரி விடுதியில் வைத்து முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன்,ஆர்.பி உதயகுமார், வைகைச் செல்வன்,ஓ.எஸ் மணியன், ராஜலட்சுமி ஆகியோரிடம் கோவில்பட்டி கடலை மிட்டாய் சங்கத் தலைவர் கண்ணன், கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பரமசிவம், மற்றும் விவசாய சங்கத் தலைவர் வரதராஜன்,ஆகியோர் முன்னாள் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் அதிமுக நிர்வாகிகள் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணிகள், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனைக் கூட்டம்
 

Tags :

Share via