4 நாட்கள் நடைபெற்ற குற்றால சாரல் திருவிழா நிறைவு பெற்றது.

by Editor / 20-08-2024 12:39:13am
 4 நாட்கள் நடைபெற்ற குற்றால சாரல் திருவிழா நிறைவு பெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேருராட்சி கலைவாணர் அரங்கத்தில் இன்று (19.08.2024) நடைபெற்ற சாரல் திருவிழாவின் நிறைவு நாள் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் . ஏ.கே. கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார்  சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்ஈ.ராஜா  வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார்  ஆகியோர் முன்னிலையில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்   தெரிவித்ததாவது,மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் தமிழக ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் குறிப்பாக சுற்றுலாத்துறை ஒரு முன்னுரிமை பெற்ற துறையாகச் செயல்பட ஆரம்பித்தது. தமிழகத்திலுள்ள சுற்றுலா வளங்களை உலகில் பல பகுதிகளிலும் தெரியும் வண்ணம் விளம்பரங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து அடிப்படை வசதிகளை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சுற்றுலாத்துறைக்கு கூடுதல் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இதனால் தமிழக சுற்றுலாத்துறையின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக தனது பணிகளைச் செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறப்புமிக்க கோயில்கள், கோட்டை கொத்தளங்கள், தமிழகத்தின் சிறப்பைப் பறைசாற்றும் பாரம்பரியமிக்க திராவிட கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை. எழில் கொஞ்சும் இயற்கை சூழல் மிக்க மலை வாழிடங்கள். வனவிலங்கு சரணாலயங்கள், உலகப்புகழ் பெற்ற அழகான கடற்கரை அனைத்து சாகச்சுற்றுலாவினை நடத்த தேவையான அமைப்புகள், முகில்முட்டும் சிகரங்கள் அதில் இருந்து உருவாகி வரும் அருவிகள், கடல் தாவர மற்றும் உயிரினங்கள் முதலான சுற்றுலாச் சிறப்பியல்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சி குறித்து நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தை ஆசிய சுற்றுலாவில் ஒரு அச்சாணியாகவும் சென்னையை தென்னிந்திய சுற்றுலாவிற்கு நுழைவாயிலாகவும் இன்னும் மேம்படுத்த வேண்டும் என்ற தொலை நோக்குடன் சுற்றுலாவிற்கு அதிக முக்கியத்துவமும், அதிக நிதி உதவியும் ஆக்கபூர்மான ஆலோசனைகளும் வழங்கி வருகிறார்கள்.

"தமிழ்நாடு சுற்றுலாக் கொள்ளகை 2023" என்ற கொள்கை வெளியிட்டு, "சுற்றுலாத்துறையில் புதிய உச்சத்தை அடைவதை நோக்கமாக கொண்டுவரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாக, நமது மாநிலத்திற்கான முதலாவது சுற்றுலாக் கொள்கையை வெளியிடுவதில் மிக்க பெருமை அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றுலாக்கொள்கை 2023ல் சுற்றுலாத்துறையின் செயல்திட்டம், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுற்றுலாத்துறையில் முதலீட்டை ஊக்குவித்தல், தமிழ்நாடு சுற்றுலா வசதிகள் செய்தல், பொறுப்புமிக்க சுற்றுலா, சமூகம் சார்ந்த சுற்றுலா, திறன் மேம்பாடு, டிஜிட்டல் முன்முயற்சிகள் மற்றும் அனைத்து சுற்றுலா பிரிவுகளுக்கான ஊக்க தொகை வழங்குதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டுள்ள சிறந்த சுற்றுலா கொள்கையாகும்.

தென் பொதிகைத் தென்றல் உலா வருகின்ற திருக்குற்றாலம் ஐந்தினை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், மற்றும் பாலை ஆகியவை ஒருங்கே பெற்ற வரலாற்று சிறப்புமிக்க தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்நகரம் தோன்றியதாக வரலாறு கூறுகின்றது. இன்றும் பண்டைய நாகரிகமும், கலாச்சாரமும், இதிகாசங்களையும், வரலாற்றையும் நினைவு கூறுகின்ற வகையில் குற்றாலம் அமைந்துள்ளது. இயற்கை வளங்களும் மூலிகைகளும் நிரம்பிய நிலையில் இங்கு அருவிகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இம்மலைப்பகுதிக்கு அகத்திய முனிவர் வந்தாகவும் இங்கு காணப்படும் மூலிகைகள் மனித ஆரோக்கியத்திற்கு உகந்ததாகவும் உள்ளது என்று இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன.

குற்றலாத்திலுள்ள அருவிகளின் சிறப்புகள் என்னவென்றால் நீராடுவதற்கு வசதியாக எல்லா அருவிகளுமே மலை உச்சியில் இருந்து கீழே செங்குத்தாக நீர் விழ்ச்சிப்போல விழுவதில்லை. பாறையின் இயற்கை அமைப்பால் இந்த அருவிகளின் நீர் பிரிந்து தலைக்கு மேல் 1,314 அடி உயரத்திலிருந்து விழுகிறது. அருவியின் வேகம் தேகத்தில் தாக்குவதால் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி உடல் முழுவதும் ஒருவித பூரிப்பை ஏற்படுத்துகின்றது. சோம்பலை நீக்கி உற்சாகத்தைக் கொடுக்கின்றது. பசியை உருவாக்கி ஜீரணத்தைச்செய்கிறது.

பாரதியார் மற்றும் கால்டுவெல்துரை தாங்கள் எழுதிய நெல்லை மாவட்ட வரலற்றில், குற்றாலம் உலகிலேயே மிகச் சிறந்த ஸ்நானக்கூடமென குறிப்பிட்டுள்ளார்கள். ஸ்டுவர்ட்துரை, குற்றாலத்து அருவி பாவங்களைப் போக்குவதாக இந்துக்கள் புகழ்கிறார்கள் என்று குற்றால வரலாற்றில் புகழ்துள்ளார்.

இங்கு பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, ஐந்தருவி. பழையக்குற்றாலம், புலியருவி போன்ற அருவிகள் உள்ளன. இவ்வருவிகளில் சுற்றுலாப்பயணிகள் ஆண்-பெண் இருபாலரும் தனித்தனி பகுதியாக நின்று நீராட வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள குற்றாலம் பேரருவி அருகில் அருள்மிகு குற்றால நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. விந்திய மலையிலிருந்து சிவபெருமான் பொதிகை மலைக்கு, அகத்திய முனிவருக்கு காட்சி அருள வரும்போது குற்றாலம் தங்கி சென்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலின் அமைப்பானது சங்கு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி செல்லும் சாலையில் சித்திரசபை அமைந்துள்ளது. இங்கு நடராச பெருமானின் ஓவியம் பண்டைய வரலாறுகள் கலாச்சாரங்கள் பண்பாடுகள் அகியவற்றினை நினைவூட்டும் வகையில் சித்திரங்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன குற்றாலத்தில் ஆண்டுதோறும் பருவகாலம் ஜீன் திங்களில் தொடங்கி செப்டம்பர் திங்களில் முடிவடைகிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் நோக்குடன் சாரல் திருவிழா வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வருடம் சாரல் திருவிழா 16.08.2024 முதல் 19.08.2024 வரை 4 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் போது நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளான படகுப்போட்டி, நீச்சல்போட்டி, கோலப்போட்டி. கொழுகொழு குழந்தைகள் போட்டி, சுற்றுச்சூழல் குறித்த ஓவியப்போட்டி. ஆணழகன் போட்டி, யோகா, மினி மாராத்தான் மற்றும் வில்வித்தை போட்டிகள் மற்றும் பல்வேறு கண்காட்சியும் நடைபெற இருக்கின்றது. சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுது போக்கு அம்சமாக பருவ காலங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள "மேலவெண்ணமடை" குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டு படகு சவாரி 19.06.2016 முதல் நடத்தப்பட்டு வருகிறது தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் தென்னிந்தியாவின் ஸ்பா குற்றாலத்தில் அருவி பகுதிகளை மேம்படுத்துவதற்காக 11  கோடி கீழப்பாவூர் பெரிய குளத்தில் படகு சவாரி அமைத்தலுக்காக10 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. என மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே.கமல்கிஷோர்,தெரிவித்ததாவது நிறைவு நாள் சாரல் விழா நிகழ்ச்சியாக கல்லூரிகளுக்கு இடையேயானசிறு தானிய உணவு போட்டி, செங்கோட்டை எஸ். எம். எஸ். எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி, ஆய்க்குடி அமர்சேவா சங்க மாற்றுத்திறனாளி மாணவர்களின் நிகழ்ச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன் கிராமிய கலைக்குழு (ஆதனூர் தூத்துக்குடி மாவட்டம்) வழங்கும் ஒயிலாட்டம் நிகழ்ச்சி நெல்லை ஸ்ரீராமா நாட்டியாலயா வழங்கும் பரதநாட்டியம் நிகழ்ச்சி, மேலகரம் திரு கலை நிகழ்ச்சி, திரைப்பட பாடகர் மற்றும் விஜய் டிவி புகழ்  செந்தில்,கணேசன் குழுவினரின் கணியான் கூத்து நிகழ்ச்சி, சாத்தூர்  முத்துமாரி குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சி, தெலுங்கானா மாநில கலைஞர்களின் கணேஷ் ராஜலட்சுமி கலந்துகொள்ளும் தேனிசை திலகம் நெல்லை தியாகராஜன்   மெலோடியஸ் மியூசியானா வழங்கும் திரைப்பட மெல்லிசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்.  தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன்,தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, மண்டல கலை பண்பாட்டு மையம், திருநெல்வேலி உதவி இயக்குநர்வ.கோபாலகிருஷ்ணன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அ.வில்லியம் ஜேசுதாஸ். மாவட்ட சுற்றுலா அலுவலர் க.சீனிவாசன், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷ்மா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுஅலுவலகர் ஆகியோர் கலந்து கொண்டனர்

 

Tags : 4 நாட்கள் நடைபெற்ற குற்றால சாரல் திருவிழா நிறைவு பெற்றது.

Share via