விஜயகாந்த் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகர் விஜய்.

by Editor / 19-08-2024 10:59:23pm
விஜயகாந்த் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகர் விஜய்.

நடிகர் விஜய் நடித்துள்ள "THE G.O.A.T" திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழு விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளனர். விஜயகாந்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு CGI கதாபாத்திரத்தை தங்கள் படத்தில் பயன்படுத்த அனுமதித்ததற்காக அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பு குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு X தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

Tags : விஜயகாந்த் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகர் விஜய்.

Share via