ஆந்திரா ரயில் விபத்து நடந்தது எப்படி
ஆந்திராவில், நேற்று பயணிகள் ரயில்கள் இரண்டும் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து எப்படி நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி புறப்பட்டு சென்ற ரயில் கந்தகப்பள்ளி கிராமத்தின் அருகே சென்றபோது திடீரென்று பிரேக்கில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த ரயில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வேளையில் அந்த தண்டவாளத்தில் பாலசா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த பாலசா எக்ஸ்பிரஸ், நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம்-ராயகடா ரயிலின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
Tags :