சுடுகாட்டில் 3 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு.

by Editor / 22-01-2025 06:04:21pm
சுடுகாட்டில் 3 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மனு பெற்று  வருகிறார். இந்த நிலையில் வாலத்தூர் கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் என்ற இளைஞர் தங்களுடைய ஊரில் உள்ள சுடுகாட்டில் 3 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு உள்ளதை அகற்றக்கோரி கழுத்தில் பதாகை போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் .இதனால் பரபரப்பு உருவானது.நான்கு வருடத்திற்கு மேலாக மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால்.இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

 

Tags : சுடுகாட்டில் 3 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு.

Share via