மது அருந்த ரூ.100 தராததால் பெற்றோரை குத்திக் கொன்ற மகன்.

by Editor / 15-08-2025 03:27:55pm
மது அருந்த ரூ.100 தராததால் பெற்றோரை குத்திக் கொன்ற மகன்.

கேரளா மாநிலம் ஆலப்புழா அருகே பெற்றோரை மகன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்கராஜ், அவரது மனைவி ஆக்னஸ் ஆகியோரை நேற்றிரவு இவர்களது மகன் பாபு (47) குத்திக் கொன்றுவிட்டு தப்பினார். அக்கம்பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்த போதிலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. மது அருந்த ரூ.100 தராததால் ஆத்திரத்தில் இக்கொலையை செய்துள்ளார். பின்னர் பாரில் பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags : மது அருந்த ரூ.100 தராததால் பெற்றோரை குத்திக் கொன்ற மகன்.

Share via