மதுரையில் மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்போர் மீது நடவடிக்கை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை.

by Staff / 26-07-2025 08:01:25am
மதுரையில் மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்போர் மீது நடவடிக்கை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை.

மதுரை மாநகராட்சி வார்டு பகுதிகளில் தற்பொழுது அம்ரூத் முல்லை பெரியார் குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சிலர் மாநகராட்சியின் குழாய்களின் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரினை சட்டத்திற்கு புறம்பாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்து வருகிறார்கள். இதனால் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படுகிறது.   

எனவே, மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பதை தவிர்க்குமாறும்  மீறி இச்செயலில் ஈடுபடும் நபர்கள் மீது மாநகராட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும். 

அவர்களின் குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும். மேலும் இந்த குற்ற செயலில் ஈடுபடுவர்களின் மீது காவல்துறையின் மூலம் வழக்கு பதியப்படும்  என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 
    
மேலும், மின்மோட்டர்கள் பயன்படுத்தி குடிநீர் எடுப்பது தொடர்பான புகார்களுக்கு தொலைபேசி எண் : 7871661787 என்ற  எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.என மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் தெரிவித்துள்ளார்.

 

Tags : Corporation Commissioner warns of action against those using electric motors to draw water in Madurai.

Share via