திமுக திவாலாகி விட்டதால் அதிமுகவிலிருந்து சென்ற 8 பேர் அமைச்சர்கள்-எடப்பாடி அதிரடி .

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.அதன் ஒருபகுதியாகதிருமயம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் திருமயம் தொகுதி அதிமுகவின் கோட்டை. கடந்த இரண்டு முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வாய்ப்பை நழுவ விட்டோம். அதனால் இங்கு ஒருத்தவர் வெற்றி பெற்றுள்ளார். தன்னை ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் ரகுபதிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். அவரை மன்னிக்கலாமா
அந்த காலத்தில் எட்டப்பன் என்று கூறுவார்கள் அப்படிப்பட்ட எட்டப்பன் தான் இந்த தொகுதியில் அமைச்சராக இருக்கிறார். ரகுபதிக்கு அதிமுகவை விமர்சனம் செய்ய எந்த அருகதையும் இல்லை.
ரகுபதி குரங்கு போல் மரத்துக்கு மரம் தாவி திமுகவுக்கு சென்று உள்ளார். எந்தளவுக்கு தூங்குகிறீர்களோ அந்த அளவுக்கு தான் பதவி உங்களிடம் இருக்கும் போகவில்லை என்றால் பதவி போய்விடும்.
அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு இன்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்று எட்டப்பன் போல் செயல்படுகின்ற ரகுபதிக்கு யோகிதையும் இல்லை அருகதையும் இல்லை.
ரகுபதி நன்றி மறந்து அதிமுகவை விமர்சனம் செய்கிறார் இது பாதக செயல். உங்களுக்காக தான் திருவள்ளுவர் நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்றன்று என்று கூறி வைத்து விட்டு சென்றுள்ளார்.ரகுபதி வழி தவறி சேராத இடத்தில் சேர்ந்து விட்டார். உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. ஜெஜே பெயரில் கல்லூரி வைத்துக்கொண்டு அதிமுகவின் இயக்கத்தை பேசுவதா.
அதிமுகவில் இருந்து சென்ற எட்டு பேர் திமுகவில் அமைச்சராக இருக்கின்றனர். அப்படி என்றால் அந்தக் கட்சியில் செல்வாக்கு இல்லை அந்த கட்சி திவாலாகி விட்டது. அந்தக் கட்சியில் யாரும் இல்லாததால் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான் அந்த கட்சியை வழிநடத்த வேண்டி உள்ளது.
அதிமுகவில் இருந்து சென்ற எட்டு பேர் திமுகவில் அமைச்சராக இருக்கின்றனர். அப்படி என்றால் அந்தக் கட்சியில் செல்வாக்கு இல்லை அந்த கட்சி திவாலாகி விட்டது. அந்தக் கட்சியில் யாரும் இல்லாததால் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான் அந்த கட்சியை வழிநடத்த வேண்டி உள்ளது.
கனிமவளத்துறையில் முறையாக செயல்பட்டால் உங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் இல்லையென்றால் கால சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கிறது. கீழிருப்பவர்கள் மேலே வருவோம் அதிமுக ஆட்சிக்கு வரும் திமுக உங்களை காப்பாற்றது. திமுக கட்சிக்காரர்களை காப்பாற்றிய வரலாறு கிடையாது. அப்படி இருந்தால் ஏன் திமுகவில் அதிமுக காரர்கள் போய் மந்திரி பதவியை பெறுகின்றனர்.
கப்பம் யார் சரியாக கட்டுகின்றார்களோ அவர்கள் தான் அங்கு அமைச்சர்கள்.ரகுபதிக்கு நாவடக்கம் தேவை. யாரால் முகவரி பெற்றோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். எங்கள் மீது அவதூறு பிரச்சாரம் செய்தால் அரசியல் அடையாளமே தெரியாமல் போய்விடுவீர்கள்.அதிமுக கட்சிக்கு யாரு துரோகம் செய்தாலும் நிம்மதியாக வாழ்ந்த சரித்திரம் கிடையாது.அடுத்த தேர்தலில் ரகுபதி வந்து நின்றால் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். ஏற்கனவே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். ரகுபதி எத்தனை அவராதம் எடுத்தாலும் எம்எல்ஏ ஆக முடியாது. என்று அதிமுகவை விமர்சனம் செய்தீர்களோ அன்று உங்களது அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டது.
Tags : 8 ministers who left AIADMK after DMK went bankrupt - Edappadi action.