சூரியனுக்கு அனுப்பப்படும் ஆதித்யா எல் 1 - இஸ்ரோ அறிவிப்பு

by Staff / 28-08-2023 04:41:11pm
சூரியனுக்கு அனுப்பப்படும் ஆதித்யா எல் 1 - இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் 3 வெற்றி மூலம் விண்வெளிப் பயணத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. இதற்காக தற்போது சூரியனை ஆய்வு செய்யத் தயாராகி வருகிறது. இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்படும் தேதியை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆதித்யா எல்-1 ஆந்திராவின் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து செப்டம்பர் 2ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஏவப்படும். பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் ஆதித்யா எல்-1ஐ விண்ணில் செலுத்தும். ஏவப்பட்ட நாளில் இருந்து, இந்த விண்கலம் 4 மாதங்கள் பயணித்து, இலக்கை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via