மதுரை - தேனி புதிய ரயில் பாதையை  கடக்க சுரங்கப்பாதைகள், ரயில்வே கேட்டுகளை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்

by Editor / 04-04-2022 05:33:22pm
மதுரை - தேனி புதிய ரயில் பாதையை  கடக்க சுரங்கப்பாதைகள், ரயில்வே கேட்டுகளை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்

மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தில், 75 கிமீ தூரமுள்ள மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே யான ரயில் பாதை பயணிகள் ரயில் போக்குவரத்திற்கு தயாராக உள்ளது.  இந்த ரயில் பாதையில் சுமார் 20 இடங்களில் பொதுமக்கள் உரிய  அனுமதி இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் ரயில் பாதையை கடப்பதாக புகார்கள் வருகின்றன. பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களில் ரயில் பாதையை பாதுகாப்பற்ற முறையில் கடப்பதாகவும் புகார்கள் வருகின்றன. இது ரயில் போக்குவரத்திற்கு பெரிய இடையூறாக அமையும்.  அருகிலுள்ள மாற்று வழிகளான சுரங்கப்பாதைகள், ரயில்வே கேட்டுகள் ஆகியவற்றின் மூலம் ரயில் பாதையை கடக்கலாம். இது ரயில் விபத்திலிருந்து பொதுமக்களை காக்கும். ரயில் பயணிகளுக்கும் பாதுகாப்பாக அமையும். அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் கண் ட, கண்ட இடங்களில் ரயில் பாதையை கடப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோல ரயில் பாதையை கடப்பவர்கள் மீது, 1989 ஆண்டு  இந்திய ரயில்வே சட்டம் 147 வது பிரிவின் கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.  இந்த இரு தண்டனைகளும் சேர்த்து வழங்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே பொதுமக்கள் அருகிலுள்ள சுரங்கப்பாதைகள், ரயில்வே கேட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி ரயில் பாதையை கடக்கும் படி ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via