மனைவியை மாற்றி திருமணம்
பீகார் மாநிலத்தில் ககாடியா மாவட்டத்தை சேர்ந்தவர் நீரஜ். இவரது மனைவி ரூபியை அதே ஊரில் உள்ள முகேஷ் என்பவர் இழுத்துக்கொண்டு ஓடிவிட்டார். இதை தொடர்ந்து வீட்டில் தனிமையில் இருந்த நீரஜ் முகேஷின் மனைவியை காதலிக்க தொடங்கி, அவரை திருமணம் செய்துகொண்டார். நீரஜ்ஜுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களையும் தான் வளர்ப்பதாக முகேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அந்த கிராமத்தில் இருவரும் அவர்களது மனைவியை மாற்றி திருமணம் செய்துகொண்டது பேச்சுப்பொருளாகவுள்ளது.
Tags :