அ.தி.மு.க .துணை கொள்கை பரப்பு செயலாளரும் நடிகையுமான கௌதமி விலகினாா்
அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளரும் நடிகையுமான கௌதமி அ.தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தற்போது தமிழ்நாட்டின் நிலவிவரும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தான் சமூக சேவை செய்யும் பொருட்டும் இந்த முடிவை கனத்த இதயத்துடன் எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கௌதமி இதற்கு முன்பு பா.ஜ.கவில் இருந்து தனக்கு சரியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கூறி 2023 கட்சியை விட்டு வெளியேறி 2024 எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அ.தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுகவின் பணியாற்றிய அவர் தற்பொழுது அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















