ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய டைனோசர் இனம்

by Editor / 09-06-2021 04:36:05pm
ஆஸ்திரேலியாவில்  உலகின் மிகப்பெரிய டைனோசர் இனம்

 

 

ஆஸ்திரேலியாவில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை பண்ணை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். தற்போது அது கூப்பர் என்ற புதிய டைனோசர் இனம் என விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். பூமியிலேயே பெரிய டைனோசர்களில் இந்த இனமும் ஒன்று என தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

கிரீத்தேசியக் காலத்தில் இந்த டைனோசர் வாழ்ந்து உள்ளதாகவும் ஆஸ்திரேலியா அண்டார்டிக்காவுடன் இணைந்த பகுதியாக இருந்துள்ளது என்றும் கூறுகின்றனர்மிகவும் பெரிய சைஸ் கொண்ட இந்த டைனோசர் தாவரங்களை உண்டு வாழ்கின்ற Sauropod வகையை சார்ந்தது. மேலும் பூமியிலேயே மிக பெரியதாக கூட இருந்திருக்கலாம் என இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பாஸ்கெட் பால் கோர்ட் அளவில் இதன் நீளமும் (25 முதல் 30 மீட்டர் நீளம்), இரண்டு மாடி அளவிற்கு இது உயரமானதாகவும் இருந்திருக்கும் என அதன் எலும்புகளை அத்தாட்சியாக வைத்து ஆய்வறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் எலும்புகளை அருங்காட்சியகம் ஒன்றில் சேகரித்து வைத்துள்ளனர். தற்போது அதனை முப்பரிமாண முறையில் ஸ்கேன் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த டைனோசரின் எலும்புகள் சேகரிக்கப்பட்ட இடத்தில் மேலும் பல எலும்புகள் இருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வு பகுதிகளும் நடந்து வருகின்றன.

 

 

Tags :

Share via