குற்றாலம்,பழைய குற்றால அருவியில் 6-வது நாளாக குளிக்க தடை நீடிப்பு- ஐந்தருவி,புலியருவியில் குளிக்க அனுமதி - 

by Editor / 17-12-2024 09:34:28am
குற்றாலம்,பழைய குற்றால அருவியில் 6-வது நாளாக குளிக்க தடை நீடிப்பு- ஐந்தருவி,புலியருவியில் குளிக்க அனுமதி - 

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பெய்த  கனமழையின் காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்ட நிலையில், நேற்று வரை 5 நாட்கள் இந்த தடையானது விதிக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில், தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள ஐந்தருவி மற்றும் புலியருவி ஆகிய இரண்டு அருவிகளில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக சேதாரம் அதிக அளவு காணப்பட்டு வரும் நிலையில், அருவிக்கரையில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீர் செய்த பிறகே குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : குற்றாலம்,பழைய குற்றால அருவியில் 6-வது நாளாக குளிக்க தடை நீடிப்பு- ஐந்தருவி,புலியருவியில் குளிக்க அனுமதி - 

Share via