தென்காசி :ஆறு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

by Staff / 02-07-2025 11:01:24pm
தென்காசி :ஆறு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல்  நிலைய கொலை வழக்கின்  குற்றவாளிமணிக்குமார்,சிவகிரி காவல் நிலைய கஞ்சா வழக்கின் குற்றவாளி,கலைசெல்வன் (20), புளியங்குடி காவல் நிலைய கஞ்சா வழக்கின் குற்றவாளியான இளங்கோவன் (29), சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளி,வேல்முருகன் (40), ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய கஞ்சா மற்றும் ஆயுதத் தடை சட்ட வழக்கின் குற்றவாளி,மாரியப்பன், மற்றும் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளி பிரபாகர் @ பிரபு (27) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அரவிந்த்    பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர்  கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி ஆறு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்..

 

Tags : Tenkasi: Six criminals remanded in custody under the Prevention of Gangsters Act.

Share via