இறந்த தாயின் பாதம்தொட்டுவணங்கி தேர்வு எழுத சென்ற மகன்.

by Editor / 03-03-2025 11:33:31pm
இறந்த தாயின் பாதம்தொட்டுவணங்கி தேர்வு எழுத சென்ற மகன்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அண்ணாநகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சுபலட்சுமி.
 இத்தம்பதினருக்கு சுனில்குமார் என்ற மகனும் யுவாசினி என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

 இதய நோயால் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த சுபலட்சுமி தனது இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்த நிலையில் இன்று அதிகாலையில் சுபலட்சுமி உடல்நிலை குறைவால் இறந்தார் ,

சுபலட்சுமி மகன் சுனில் குமார் அருகிலுள்ள கன்கார்டியா பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இன்று பிளஸ் டூ பொது தேர்வு தொடங்கியதால் தனது தாய் இறந்த சோகத்தையும் மறைத்து இறந்த தாயின் பாதத்தை தொட்டு வணங்கிவிட்டு கண்ணீர் மல்க தமிழ் தேர்வை பள்ளியில் எழுதிவிட்டு மதியம் வீட்டிற்கு வந்தார். அதன் பின்பு தனது தாயின் இறுதிச்சடங்கில் அவர் கலந்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது
 

 

Tags : இறந்த தாயின் பாதம்தொட்டுவணங்கி தேர்வு எழுத சென்ற மகன்.

Share via