மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் இன்று மோகன் யாதவ் பதவி ஏற்பு

by Staff / 13-12-2023 11:49:15am
மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் இன்று மோகன் யாதவ் பதவி ஏற்பு

மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் இன்று மோகன் யாதவ் பதவி ஏற்கிறார். துணை முதலமைச்சர்களாக ராஜேந்திர சுக்லா மற்றும் ஜகதீஷ் தேவ்டா ஆகியோர் பதவியேற்கின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 163, காங்கிரஸ் 66 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனிடையே இன்று மோகன் யாதவ் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.

 

Tags :

Share via