கேரளாவில் கனமழைக்கு நேற்று வரை35 பேர் பலி.

by Editor / 01-06-2025 08:57:05am
கேரளாவில் கனமழைக்கு நேற்று வரை35 பேர் பலி.

கேரளாவில் ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இடுக்கி, பத்தனம்திட்டா,  காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குட்டநாடு பகுதியைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளம் மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. நேற்று வரை மாநிலம் முழுவதும் மழை பாதிப்பால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களிலும் வீடுகள் இடிந்து மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆலப்புழா, எர்ணாகுளம், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் நீடிக்கிறது. 

 

Tags : கேரளாவில் கனமழைக்கு நேற்று வரை35 பேர் பலி.

Share via
Logo