அச்சன்கோவில் ஐயப்பனின் தங்க ஆபரணபெட்டிக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுவாமி ஐயப்பனின் ஆலயங்களில் அரசனாக வீற்றிருக்கும் ஆலயம் அச்சன்கோவில் ஆகும்,ஆண்டுதோறும் மார்கழி மாதம் ‘மண்டல மகோற்சவ திருவிழா’, 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மண்டல மகோற்சவ திருவிழா நாளை தொடங்கப்பட உள்ளது.
இந்த திருவிழாவின் போது ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக, தங்கத்தால் ஆன அங்கிகள் மற்றும் ஆபரணங்கள் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு, இரண்டு மாநில போலீசார் பாதுகாப்புடன் தமிழகம் வழியாக அச்சன்கோவில் கொண்டு செல்லப்படுவைத்து வழக்கமாக இருந்துவருகிறது.
இன்று புனலூரிலுள்ள பார்த்தசாரதி ஆலயத்திலிருந்து எடுத்து வரப்பட்ட சுவாமி ஐயப்பனுடைய தங்க ஆபரணங்களுக்கு புளியரை,செங்கோட்டை, தென்காசி, பண்பொழி, கணக்கப்பிள்ளைவலசை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முன்னதாக தென்காசி நகரப் பகுதிக்கு வருகை தந்த அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பனின் தங்க அங்கி மற்றும் ஆபரணத்திற்கு காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் முன்பு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பொதுமக்களின் தரிசனத்திற்காக தங்க ஆபரண பெட்டி வைக்கப்பட்டது.
Tags : அச்சன்கோவில் ஐயப்பனின் தங்க ஆபரணபெட்டிக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.