இந்தியாவில் மின்சார கார்கள் தயாரிப்பில் போர்ட் நிறுவனம் ஈடுபட திட்டமிட்டு உள்ளதாக தகவல்
இந்தியாவில் மின்சார கார்கள் தயாரிப்பில் போர்ட் நிறுவனம் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 2 பில்லியன் டாலர் நஷ்டம் காரணமாக சென்னை மற்றும் குஜராத்தில் இயங்கி வந்த தொழிற்சாலைகளை மூடுவதாக கடந்த ஆண்டு போர்ட் நிறுவனம் அறிவித்தது. இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் மற்றும் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசின் சலுகைகள் உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் போர்ட் நிறுவனம் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது. நடுத்தர மக்களை அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள மாருதி சுசுகி இதுவரை மின்சார காரை அறிமுகப்படுத்ததால் நிறுவனத்திற்கு கூடுதல் வாய்ப்பாக கருதப்படுகிறது. சென்னையில் மின்சார வாகன தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி தொடங்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. மேலும் இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக போர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags :